நகரம்
நகரின் எல்லையில் இருந்து கொண்டிருக்கிறேன்
இங்கும் கட்டிடமரங்கள் வானை தொடபார்கின்றன
ஆறு மாதமாக அந்த 8 மாடி குடியிருப்பில் வேலைபார்த்தவள்
தார்பாய் கழிப்பறையில் குளித்து கொண்டிருகிறாள்
இடம் தெரிந்தவர்கள் கூடிகொண்டும்
வழி அறித்தவர்கள் குறைத்துகொண்டும் வருகிறார்கள்
தெருக்களில் உணர்ச்சி அறியாத நிழல்கள்
நடக்க தொடங்கிவிட்டன
இவர்களை எல்லாம் என்னால் எளிதில் கடக்கமுடிகிறது
தனக்கு கஞ்சி வைத்த மனிதர்களை கானம்மென்று
தொழிற்பூங்காவை கடந்து செல்லும் பொழுதெல்லாம்
வெறித்து பார்க்கும் தெருநாயின் கண்களை தான்
கடந்து செல்லமுடியவில்லை

