தந்தையின் இரத்தமல்லவா
தனியார் மருத்துவமனையில் நான் பிறந்தபொழுது என் தந்தை
மட்டற்ற மகிழ்ச்சியடைந்தார்...!
காரணம்
என்னை ஓர் தொழிலாளியின் மகளாக
அரசு மருத்துவமனையில் அல்ல....
ஓர் முதலாளியின் மகளாக
தனியார் மருத்துவமனையில் பிறக்கவைத்ததற்கு....
நான் ஆங்கில மொழி கற்பிக்கும் பள்ளிக்கு
பள்ளி வாகனத்தில் சென்ற பொழுது
ஆனந்தத்தில் துள்ளி குதித்தார்...!
காரணம்
என்னை ஓர் தொழிலாளியின் மகளாக
அரசு பால்வாடியில் அல்ல....
ஓர் முதலாளியின் மகளாக
தனியார் பால்வாடியில் படிக்கவைத்ததற்கு....
என்னதான் முதலாளியின் மகளாக
வளர்க்க நினைத்தாலும்.....
என் தந்தை முதலாளி அல்லவே....
அவர் ஓர் சாதாரண தொழிலாளி அல்லவா.........!
தொடக்கப்பள்ளி முதல் உயர்நிலைப்பள்ளி வரை
அரசு பள்ளியில் கற்ரேன்....
உயர்நிலை தேர்வில் நல்ல மதிப்பெண் பெற்ரேன்...
"தனியார் பள்ளியில் சேர்க்கவா?" என்று கேட்டார்...
வேண்டாம் என்று அதே பள்ளியில்
மேல்நிலைக்கல்வியும் கற்ரேன்....
இவ்வளவு வருடம் பொறுத்திருன்த என் தந்தை
மறுபடியும் ஓர் முதலாளியின் மகளாக
என்னை வளர்க்க வேண்டி
என் விருப்பம் இன்றி என்னை
பொறியியல் படிப்பில் சேர்த்தார்....
நானும் கற்ரேன்....
வசதிகள் மட்டுமே முதலாளி போல்
கொடுக்க நினைத்தாரே தவிர,
என் பழக்கவழக்கங்கள் எல்லாம்
அவரது பழக்கவழக்கங்களாகவே இருந்தன.
வளர்ந்த நானும் – என்
அப்பாவை பிரதிபலிக்கும்
மகளாகவே இருந்தேன்.....
எந்த சூழ்நிலையிலும் அனுசரித்து செல்லவும்....
உரிமைகள் மறுக்கப்படும் போது தட்டிக்கேட்கவும்......
அநியாயம் இளைக்கப்படும் போது எதிர்த்து போராடவும்.....!
நமக்காக மட்டும் அல்லாமல்
பிறருக்காகவும் சற்று யோசிக்கவும் வேண்டும்
என்று சிந்திக்கவும் செய்தேன்.....
ஆனால் செயல்படுத்த முடியவில்லை......! (பெண் அல்லவா)
தொடக்கப்பள்ளிஇல் கட்டட வேலைக்காக
வந்திருன்த என் தோழிஇன்
பெற்றோர்உடன் அமர்ந்து
மதிய உணவு சாப்பிட்ட போது
இனம் புரியா மகிழ்ச்சி......
“இனி மதியம் இட்டிலி சாப்பிடாத.....
பழைய சாதமா இருந்தாலும்,
மதியம் சாதம் தான் சாப்பிடணும்”னு சொன்நாங்க....
அப்போ எனக்கு மனசு ஏதோ பண்ணிசு.......
கல்லூரிப் பேருந்தில்
சினிமா பாடல்கள் கேட்டுக்கொண்டு
பயணிக்கும் மாணவர்களுக்கு மத்திஇல்......
அரசு பேருந்தில்
கல்லூரிக்கு கூலி வேலைக்கு
வருபவர்களுடன் உரையாடிக்கொண்டே
கல்லூரிக்கு செல்வேன்....
அது ஒரு இனிய அனுபவம்........
பேருந்துக்காக காத்திருக்கும் போது
சாலை பெருக்கும் பெண்மணிஇன்
சேலை சுருங்கி இருப்பதை பார்த்து
அதை வாங்கி இஸ்திரி போட்டு
கொடுக்க வேண்டும் என்று தோன்றும்......
அது ஏன் என்று எனக்கு தெரியாது?..........?
பலநாள் சிந்திக்கவும் செய்தேன்.....
இதைப்பற்றீ.....
என்னதான் முதலாளியின் மகளாக
முதலாளிதுவ எண்ணங்களோடு
என்னை வளர்த்தாலும்
என்னுள் ஓடுவது ஓர்
தொழிலாளின் ரத்தம் அல்லவா?
அது தான் இதற்கெல்லாம் காரணம் என்று
புரிந்து இன்று தான்...........
(எழுத்து பிழைகளுக்கு மன்னிக்கவும்...நன்றி........!!!)