என்னவைகளில் சில

#அப்படி என்ன தான்
சண்டையோ சச்சரவோ
இந்த வானம் ..
பூமிகூட 4 நாளா
சமரசம் பேசுது ..
தட்டி கேட்கவும் ஆள் இல்ல ..
தடுத்து நிறுத்தவும் ஆள் இல்ல ..

#கலைகின்ற நிமிடங்களில்
கலை பொருளாகியது
உன் விழி பார்வைகள் ...

#உன் குரல் இல்லையானால்
என் பாதை இருளுற்று போகும்
என் வாழ்வும் பொருளற்று போகும் ..

#பிறரிடம் தோற்கையில்
உன்னிடம் அழுகிறேன் ..
உன்னிடம் தோற்கையில்
மட்டும் தான்
சிரிப்பாகிறேன் ..
சிலையாகிறேன் ..
சிறையாகிறேன் ..

#விட்டுவிடுவதல்ல ..
விட்டு விட்டு தொடர்வது தான் ...
‪#‎kaadhal‬ - ok kanmani

#முத்தாய் ஒளிந்திருந்தாய் ..
முதலவனாய் ஒளி பெற்றாய் ..
இருக்கும் இடமிருந்து
இரு கை ஏந்தி அழைக்கிறாய் ..
ஈராயிரம் கிலோமீட்டர்உம்
கடந்து தொடர்கிறேன் இரு நிமிடங்களில் ..

#பலரும் பறக்கத்தான் நினைக்கிறார்கள் ..
சிலர் இறை(ரை) என்னும் கரைத்தேடி ..
சிலர் பணம் என்னும் சிறைத்தேடி ..

#தடுக்கி விழும்போது
தடுக்கமுடியாவிடினும் ..
தளராமல் நீ ..
துளிர்ந்தேழ துணை நல்குவேன் ..

எழுதியவர் : vibu (26-Jun-15, 9:17 pm)
பார்வை : 67

மேலே