என் தேடலின் பக்கங்கள் 2 - உதயா

கங்கை .

காசியில் ஓடும் புண்ணிய நதினையினை அறியவே என் பயணம் தொடர்ந்தது. அமைதியாக ஓடிக்கொண்டிருந்த கங்கையின் கரைகளின் மீது என் பயணம் தொடந்தது கங்கை பாய்ச்சலின் எதிர் திசையினை நோக்கியவாறே.

விஞ்சான ஆராய்ச்சிகளின் கூற்று படி கங்கை சில தினங்களின் வற்றிவிடுமென செய்தி விளக்கங்களுடன் வெளிப்பட்டன. இதனை அறிந்த ஞானிகளும் முனிவர்களும் வழக்கம் போல அவர்களின் செயல்களை நடத்திக் கொண்டே இருந்தனர். காரணம் உலகம் அழியும் வரை கங்கை வற்றாதுயென அவர்களின் அசைக்க முடியாத கூற்று.

பல மகான்கள் குறிப்பிட்ட நாட்களில் இங்கு நீராடவருவது மகா உச்சமாம் என்று பெயரால் அலங்கரிக்கப் படுகிறது . சில வேலைகளின் இங்கு ஜல சமாதி ஆகும் மகான்களின் எண்ணிகையும் ஏராளம். இன்னும் சில மகான்கள் கங்கையின் ஆழப் பகுதியில் தவம் செய்வதாய் பலரால் நம்பப்படுகிறது.

பாவங்களை துடைக்கவே மக்கள் படையெடுத்தவாறே கங்கையை நோக்கி செல்கின்றனர்.
மூன்றுமுறை முங்கி எழுந்தால் பாவங்கள் துடைக்கப்படும் எனும் நம்பிக்கையில், ஏதோ ஒரு கடமைக்காக மூன்று முறை முங்கி எழுந்துதான் சிலர் செல்கின்றனர்.

உண்மையில் பாவங்கள் துடைக்கப் படுகிறதா.? அவை எவ்வாறு கங்கா தேவியால் மட்டும் துடைக்கப்படும். சில வினாக்களும் என்னுள் பிறந்தாவாறே கங்கை கரையினில் அமர்ந்துக் கொண்டேன் .
எண்ணில் அடங்க மக்களின் பாவங்களை விட , மகான்களின் தவம் வலிமை மிகுந்ததாக கருதப்படுகிறது என்பதையும் அறிந்துக்கொண்டேன்

மகான்களின் புண்ணியத்தையும் கங்கை அன்னை வாங்கிக்கொள்கிறாள் . மக்களின் பாவங்களையும் அவள் வாங்கிக் கொள்கிறாள்.இவ்வாறுதான் மக்களின் பாவங்கள் துடைக்கப்படுகின்றன. எத்துனை முறை கங்கையில் மூழ்கினாலும் மக்களின் பாவங்கள் முழுமையாய் துடைக்கப்படாது என்பது மக்களே அறியாத உண்மையாகும். மக்களின் பாதி பாவங்களை மட்டுமே கங்கை ஏற்றுக்கொள்கிறாள் . மீதமிருக்கும் பாவத்தை அவரவர் அனுபவித்தே ஆகவேண்டும் என்பது இன்னும் பலரும் அறியாத உண்மை.

கங்கையை சுற்றி இன்னும் அணையா பிணங்களின் எரிப்பு தளங்கள் சீரியவாறே, சில பிணங்கள் கங்கையின் மேல் ஓடிக்கொண்டிருந்தன. ஆடையின்றி சில மகான்கள் வேகமாக எம்மை நோக்கியவாறே வந்துக்கொண்டிருந்தனர்.

எல்லாம் மாயை என தொடங்கியது அவர்களின் சற்று நீளமான உரையாடல். நீ உன்னை தேடப் பிறந்தவன் உன் தேடலின் இறுதி கண்டுபுடிப்பு மரணம் என்று நீ அறிந்தும் என முடித்துவிட்டு அவர்கள்
கங்கையில் மூழ்கினார்கள். சில நிமிடங்கள் கழிந்து இருக்கும், நான் பிறகுதான் அறிந்தேன் அந்நிமிடத்திலே அவர்களின் உயிரும் கரைந்துக்கொண்டு இருந்தது என்று .

அதிகாலை நேரத்தில் நான் மட்டும் தனிமையில் நின்றுக் கொண்டிருந்தேன் கங்கையின் கரையினில்.
என்னை முழுமையாய் அவளிடம் ஒப்படைக்க கங்கையில் இறங்கினேன். எவ்வித எண்ணமும் இன்றி
கங்கையின் மிக ஆழப்பகுதிக்கு சென்றேன்.

ஆழம் செல்ல செல்ல மனது மென்மையானது. ஒரு புது பிறவி எடுத்தது போல் என்னுள் உணர்வு தோன்றியது. உலகமே புதிதாய் தென்பட்டது. கங்கையிலிருந்து கரைக்கு நான் திரும்ப ஆதவனின் கதிர்கள் அரவணைப்பில் எங்கிருந்தோ வந்துகொண்டே இருந்தது ஒரு சங்கீத ஒலி என்னை தாலாட்டவே
என் தேடல் பயணம் தொடர்கிறது .
தொடரும் என் தேடல் ....

எழுதியவர் : udayakumar (26-Jun-15, 11:33 pm)
சேர்த்தது : உதயகுமார்
பார்வை : 104

சிறந்த கட்டுரைகள்

மேலே