மீதானப் பெருவெளி

மருத நில மொன்றில்
மனிதன் ஒருவன் எதிர்ப்படுகிறான்.
கருத்த மேனியுடன்
ஆடைகளும் கறுத்து காணப்படுகிறது.
பல ருத்ராட்ஷ மாலைகளில்
ஒன்று மட்டும் மிகவும் கருமை நிறமுடையதாய்.
ஸ்னேகமாய் புன்னைக்கிறான்.
கைகளை யாசிப்பது போல்
குவிக்கச் சொல்கிறான்.
தன் கைகளில் இருக்கும் நீரை
என் கைகளில் இடுகிறான்.
வெண்நிற மேகங்கள்
நீரில் பிரதிபலிக்கின்றன.
கைகளில் இருப்பது ‘நீரா அல்லது ஆகாயமா’ என்கிறான்.
விடை பகர துவங்குகையில்
தூரத்தில் நாய்கள் விளையாடத்
துவங்கி இருக்கின்றன.

மீதானப் பெருவெளி - ஞெயம் அளக்கப்படு பொருள்

எழுதியவர் : அரிஷ்டநேமி (27-Jun-15, 12:24 am)
பார்வை : 154

மேலே