உண்மைக்கு கிட்டும் பரிசு - உதயா
கருப்பு வெள்ளை
தொலைக்காட்சியைப் போல
ஆங்காங்கே பசுமை வனங்களும்
உலர்ந்த வனங்களும் தென்பட்டன
என் தொலைக் காட்சிக்கு
ஓரவஞ்சனை செய்தவாறே
நீர் நிலைகளும் பள்ளத்தாக்கின்
விருட்சங்களின் வாசலுக்கே
விரும்பி சென்றன
கோபமுற்ற மூங்கில் காடுகளின்
ருத்ர தாண்டவத்தில்
தீப்பொறிகளை ஈன்றெடுத்து
தானே சுமர்ந்து சென்றன
வஞ்சனை செய்யும்
நீரினை கானலாக்கவே
நீர் நிலைகளையெல்லாம்
சுற்றி வளைத்தன
அங்கோ தன் இனமே
தன்னை நெருங்கவிடாமல் தடுத்து
தான் சுமர்ந்து வந்த தீயையும்
தன்னையும் அழித்துவிட்டது

