நமது உள்ளம்
சிற்பி செதுக்குவானோ
கடவுளின் சாயலை
அது உண்மையின் சாயலா
சிற்பியின் மூளைக்கு எட்டியவாறு
தத்ரூபமாக கடவுளின் சாயலை தருகின்றான்
முத்து பிறப்பது சிப்பிக்கு பெருமை
சிலை வடிப்பது சிற்பிக்கு பெருமை
உண்மையில் முத்து முத்துதான்
சிலை சிற்பியின் கற்பனையே
அதை மனிதன் கடவுள் என்கின்றான்
மனிதனைப் போல் முட்டாள் யாரும் இல்லை
பகுத்தறிவு மிக்க மனிதனால் பகுத்தறிய முடியவில்லை
சிற்பி கடவுளைக் கண்டானா இல்லை இல்லை
அவன் ஏதோ ஒரு யூகத்தில் செதுக்குகிறான்
கடவுள் நம் சிந்தனைகளுக்கு எல்லாம் அப்பாற்ப் பட்டவர்
அவரை நம்மால் உணர்ந்து கொள்ள முடியும்
பார்த்திட முடியாது
நம்மை வழிநடத்தும் அளப்பரிய சக்தியே கடவுள்
அந்த உணர்வை எழுதிடவோ செதுக்கிடவோ முடியாது
கோயில் என்பது ஆண்டவன் வாழும் இல்லம்
அந்த இல்லம் நமது உள்ளம் மட்டுமே