நாற்றம் அடிகிறது

அட சூரியனே ! உனக்கு சூடு சுரணை இல்லையா ?
திட்டித்தீர்கிறேனே உனக்கு சற்றும் சுடவில்லையா ?

என்று சுட்டுக்கொளுத்திய உன்னை ஏசி இல்லா நான் ஏசினேனே அன்று .

இன்று கொட்டா மழை சொட்டி தீர்க்கையில் ,
திட்டிய திட்டை மனதில் வஞ்சகமாக வைத்துகொண்டு ஓடி ஒழிந்து கொண்டாயே !.

உன் ஒளியின்றி மழையில்லை என்று உணர்த்தும் தருணமா இது ?

நாளையேனும் எட்டிப்பாரடா ஞாயிறே !!

ம் ...
கும்மென்று
நாற்றம் அடிகிறது !

ஈரம் காயாது பதத்துப்போன
ஒட்டுத்துணிகளும் , பாத உறைகளும்.

பாவி உன்னை பழிய மாட்டேன் பார்த்து செய்யடா பகலவனே !!.

எழுதியவர் : கேசவன் புருசோத்தமன் (27-Jun-15, 1:25 pm)
பார்வை : 186

மேலே