செரேயா
செரேயா அடியே புள்ள செரேயா!
யாரப் பாட்டி கூப்பிடறீங்க?
உந்தங்கசசி செரேயாவத்தான்டி கூப்பிடறேன்டி நம்பித்தா.
பாட்டி எம்பேரு நமிதா. எந்தங்கச்சி ஷ்ரேயா. ஏம்பாட்டி எங்க அழகான பேரையெல்லாம் அசிங்கப்படுத்திறீங்க?
அழகான பேராம். குப்பையிலே தூக்கிப் போடுங்கடி. ஏன்டி பேத்தி நான் அஞ்சாம் வகுப்புப் படிச்சவதான். ஒங்கப்பனுக்கு அறிவழகன்னு அழகான தமிழ்ப் பேரா வச்சு பெரிய படிப்பாப் படிக்க வச்சோம். இப்ப மாசம் மூணு லட்சம் சம்பாதிக்கிறான். அது போதுமா? எந்த இந்திக்காரனாவது தாம் பெத்த பிள்ளைகளுக்குத் தமிழ்ப் பேரு வச்சிருக்கறதா கேள்விப்பட்டிருக்கறீங்களா? தமிழனக்குத் தன்மானம் கெடையாதடி. அழகான ஆயிரக்கணக்கான பேரு தமிழில இருக்கறபோது தமிழ்ப பிள்ளைகளுக்கு வாயிலே நொழையாத இந்திப் பேர வைக்கறாங்க. இத இந்திக்காரங்க பாத்தா தமிழர்களையும் தமிழ் மொழியைப் பற்றியும் கேவலமா நெனைக்கமாட்டாங்க?
------
மொழிப் பற்று உள்ளவர்கள் பகிர்ந்தளிக்கவும். போட்டிக்கு பதிவு செய்யப்பட்டதல்ல. எனவே நன்று சிறப்பு அருமை போன்ற மதிப்பீடுகள் வழங்குவதைத் தவிர்க்கவும்.