பரவசம் பற்றிக்கொண்ட பொன்னொளி வெளியில்

சேயாகிய தாயோ தாயாகிய சேயோ
தந்தையின் தோழமையோ
'தகப்பன் சாமி' தேன்நிலையோ
ஆனந்தம் அள்ளிப்பெற காற்றுக்கும் கரங்களில்லை
ஆகாயத்தோணியிலே அமர்த்திடவோ நீளமில்லை
மண்ணிலே அடுக்கிடவோ மொத்த
நிலம்போதவில்லை
ஆழியிலே பதப்படுத்த ஆழமது அதிகமில்லை
தீத்துளிராய் தீபங்கள்
பனித்துளியென உருகும்நிலை
உள்ளிருக்கும் உயிரின் குரல்
வேர்த்தளர்த்தி இசைக்கும் நிலை
அகமிணைந்த காந்தம்- விசை
நிஜம்துறந்த நீட்சிநிலை
ஏகாந்தம் ஏந்திவரும் அழகியலின்
உச்சநிலை
தமிழமுதம் திறண்டெழிலாய் பண்புலர
பாடும்நிலை....

என்னென்று சுகிப்பது ....?!

புவியெங்கும் முகிழ்ந்துள்ள
கவியிதழ் மனஇன்பங்கள்
ஒரு நொடியில் ஒன்றாகி
அண்டம்தொழும் அன்பாகி
யாதுமாகி யாவுமாகி
ஞானம்வளர் வேதமாகி
பார்க்கருவில் ஜனிக்கின்ற
பேரின்பப்
பரவசமே!

எழுதியவர் : மதுமதி . H (27-Jun-15, 2:27 pm)
பார்வை : 56

மேலே