அழிவிலா அரூபம்
இமைகள் இழுத்து
துயிலைத் துளைத்து
கனவுகளுருவி
களைந்தாலும்
கதறக் கதற
துடிக்கத் துடிக்க
கூர்வாள் கொண்டுனை
சிதைத்தாலும்
ஆலம் உமிழும்
நெருஞ்சிக் கயிற்றால்
நாளும் உனையே
நெரித்தாலும்
ஏனோ நெஞ்சே
நினைவுகள் யாவும்
மீண்டும் மீண்டும்
உயிர்த்தெழுதே
மாயம் யாவும்
காயம் சேரும்
மடியா முடிவிலி
மனமன்றோ!