என் இனிய மழைத்துளிகள்
காலை புலர்ந்திட மேகம் மகிழ்ந்திட
சாரல் சிலிர்த்திடவே
சாலை முழுவதும் ஈரத்தூரிகை
தூரல் தீட்டிடவே
வேகம் கொண்டிரு கைகள் தறிகளின்
சேய்களை அணைத்திடவே
காகம் அங்கொரு ஓரம் அமர்ந்திட
கரைந்திடும் மழைதனிலே
சிந்திய துளிகள் செந்தழல் கதிரால்
சட்டென உறைந்தனவே
பந்தய திடலாய் மாறிய பாதையில்
முந்திய வாகனமே
பள்ளிகள் விடுமுறை துள்ளிடும் மழலைகள்
உடைந்திட்ட விண்னணையால்
பளிரிடும் ஆதவன் அதற்குள் திரும்பிட
புறப்படும் வாணியின்தாள்
ஒரு நொடி வானம் பலகுளிர் விதைகள்
தூவிய தேன் தருணம்
மறுகணம் ஏதோ மறந்ததைப் போல
மறைந்தது தண்வருணம்... .