மழைக் குறள்

''இடியும் மின்னலும் கொடியதன்று-பின்னால்
இதம்தரும் இசையாய் மழை.''

ஆனந்தம் தாளாத மேகங்களெல்லாம்
ஆகாயத் திடலெங்கும் வேகங்கள் தாண்டி
தூரலாய் சாரலாய் தித்திக்கும் கடலாகி
மண்ணிலே திரண்டோடி பண்ணிலே திறண்கூடி
புள்ளினம் படபடக்க பூக்களோ மெய் சிலிர்க்க
துள்ளிடும் படமெடுக்க பாவையின் கை துடிக்க
துளித் துளியாய் மழைவிதைகள்
உளியொலிப் போல் முத்தமிட
வளி வழியாய் விழைந்துழுது
உயிர்வெளியில் சத்தமிட
முகம் நனைத்து அகம் குளிர
கண்மூடிக் கரைகின்றேன்
மனம் நிறைய சுகம் வழிய
கொண்டாடிக் களிக்கின்றேன்.

எழுதியவர் : மதுமதி . H (27-Jun-15, 2:55 pm)
பார்வை : 149

மேலே