வேதியல் விஞ்ஞானம்

உன்னை காண
காத்துக்கொண்டிருந்த காற்றும் கூட
இப்பொழுது தானடி
மரத்திலிருந்து நகர்ந்து போனது
நானும் மரமும் மட்டும் அப்படியே

நீ மட்டும் எப்படி வருவாய்
மழை பெண்ணே !
நான் காத்திருந்த நாள் முதல்
மனிதனின் ஏதோவொரு தாகத்திற்கு
இந்த மரங்கள் பலியாகி கொண்டுதான் இருகின்றன

அவன் அறிவானா
ஒரு விதையின் வேதியல் மாற்றமே
வானத்தின் விஞ்ஞான மழை என்று

எழுதியவர் : மதனா (27-Jun-15, 5:33 pm)
Tanglish : vethiyal vignaanam
பார்வை : 99

மேலே