கற்சிலைதான் தேவையோ

கண்ணகிக்கு எதற்கடா கற்சிலை
மதுராபுரியே இங்கு
மண்ணோடு மண்ணானது அன்று
கற்புக்கரசி நீதான் என்று
கல்வெட்டு சொல்கிறது இன்று
கள்வன் என்று என்னி உன்
கணவனை மாய்த்துவிட
காட்டாற்று வெள்ளமென
காணப்பட்டாய் கண்மணியே
கோவலன் தலைக்கு இத்தனை விலையா!
இறை செய்த பிழைக்கு
இல்லவன் என்ன செய்வான் நல்லவளே
புல்லொன்றும் பூண்டோன்றும்
புவிதனில் மீளாமல்
புதைத்திட்ட உமக்கு
புண்ணியம் செய்ததைபோல்
பூலோக மாந்தர் காண
கற்சிலைதான் தேவையோ!
காலில் இடும் சிலம்புக்கு
காதலன் உயிர் போக
கண்களால் கணல் வைத்தாய்
கல்ழகர் தேசத்திற்கு!
பாண்டியன் பணித்தது
நீதியென்று பறையவில்லை!
பாவையே நீயென்ன
நீதி செய்தாய் சொல்வாயோ?
கோவலன் மண்டதற்கு நீ
கொளுத்திய மதுரையினி எத்தனை
கோவலன்கள் மாண்டனறோ தெரியவில்லை
மாண்டவர் மணையளும்
மன்னெரிக்க புர்ப்பட்டால்
மந்தனில் மானுடம்
மீண்டிருக்குமோ தெரியாது
புத்தன் ஜனித்த
புவியில் தான் நீயும் ஜனித்தாயோ?
பூவையே!
புன்னாக்கிவிட்டாய்
புவிதனை நீயே!