மண்ணுக்கு இரை இளையோர் அல்ல
பாலை வனத்தில்
தாகம் தீர்க்க
அலையும் ஒட்டகம் போல்
எம் இளையோர்
இரு தலைக்கொள்ளியாக
அலைவது ஏன் !
நிம்மதி எனும்
நீள் வட்டப்பாதையை
அடைய முடியாமல்
அகதியாக நிற்பது
எம் இளையோர்தான்
பெற்றோரின்
கனவுத் துளிகளை நிஜங்களாக்க
பெரும் பாடுபட்டும் முடிவதில்லை
விண்ணோர் ஏற்றிய
விதியின் மிதிவெடியில்
சிக்கி சிதறரடிக்கபடுகிறது
எம் இளையோர் வாழ்வு
இலக்கணத்துடன்
இணைந்திருக்கும்
இளையோர்
செல்வங்களை
செலவு செய்து
விடாதீர்கள்
மண்ணுக்கு இரை
இளையோர் அல்ல
நாட்டை ஏமாற்றுபவர்களாக
இருக்கட்டும்
இளையோர்
எண்ணங்களை
எறிந்துவிடாதீர்கள்
ஏட்டுச்
சுரைக்கைகளாக
வீரகேசரி வாரமலர் வெளியான எனது கவிதை