துளிப் பாக்கள் ii

                துளிப் பாக்கள் ...ii



கோழிக் குஞ்சுகள் 
கழுகு குஞ்சுகளைக் கண்டு 
ஓடி ஒளிகின்றன கூட்டிற்குள் 
..........பசி !

தன்  குஞ்சுகள் பசியோடிருக்க 
குயில் குஞ்சுகளுக்கு பசியாற்றும் 
தாய் காக்கை 
.........சமுக  சேவை !

கண்ணாடி பார்க்காமலே 
தன்னை அழகுபடுத்திக் கொண்டது 
வானவில் 
.........சமூகச் சீரழிவு !

தானும் வாழாது தன்
இனத்தையும் வாழ விடாது 
நண்டு 
........சுயநல அரசாங்கம் 

காக்கைகள் கரைகின்றன 
சோறு கிடைக்கும் வரை 
கரைவதில்லை வேறு எதற்கும் .....
........ஏழை குடிமகன்

சேற்றில் வாழ்வதால் வருத்தமில்லை 
ஆழகாய் பிரகாசிக்கிறது நறுமணத்தோடு 
தாமரை 
........நீங்கலாக

எழுதியவர் : ஜெய ராஜரெத்தினம் (28-Jun-15, 10:29 am)
பார்வை : 95

மேலே