லிமரைக்கூ

                லிமரைக்கூ    ii


சாமி தந்தது  பிள்ளை வரம் 
கருணையோடு இலையில் படையல் 
கிடைத்தது  சொத்து பிரிவில் தரம் 

அப்பா இருந்து  ஆண்டது  கடை
இறுதி வாழ்க்கை இடுகாட்டில்
பையன் வேண்டுகிறான் படை  

 வரங்கள் தந்தது தேவி 
 அடிக்கடி அழுது  சிரித்து 
இரவில் வந்து விடுகிறது ஆவி 

பெற்றவனுக்கு இல்லை பூமி  
இறந்தபின் சுமந்து செல்ல தயங்கி 
உற்றவனிடம் கெஞ்சுகிறான் சாமி

இருப்பவன் தேடுகிறான் கனவில் 
இல்லாதவன் தெருத் தெருவாய் 
ஒவ்வொரு வரின்  நினைவில் 

காலை மாலை தினம் பட்டை 
இல்லையென்று  கடவுளை  சபித்து 
கையேந்துகிறான் கோவிலில் பட்டை  




              

எழுதியவர் : ஜெய ராஜரெத்தினம் (28-Jun-15, 11:24 am)
பார்வை : 117

மேலே