சென்ரியு2

ஹைக்கூ ! சென்ரியு....2


சொத்தாக கவிதை 
நம்மோடு  வாழ்கிறார் 
பாரதியார் 

சந்தோசம்  உழவுக்கு 
வருத்தம் பட்டு பூச்சிக்கு 
மழை

பெரும் புரட்சி
சாதனை விலையில்
தங்கம்

குமரி போல
காத்திருக்கின்றன
நல்ல திரைப்படம்

கண் களுக்குத் தெரியாது
தொடும் உணர்வில்
தென்றல்

நிமிடத்தில் வாழ்க்கை
அழகு மிளிரும்
வானவில்

வேண்டும் தடை
வேண்டாம்
புகையிலை ! 

வேண்டும் தடை
வேண்டாம்
மது

கால்களே
கண்மணி யானது
விழியிழந்தோர்

தொலைக்காட்சியில் காண்போம்
இல்லத்தில் ரசிப்போம்
அரட்டை அரங்கம்

படித்துக் கொண்டே இருக்கிறோம் 
அனுபவம்
வாழ்க்கை ! 

எழுதியவர் : ஜெய ராஜரெத்தினம் (27-Jun-15, 8:27 pm)
பார்வை : 181

மேலே