நம்பினார் கெடுவதில்லை நான்குமறை தீர்ப்பு - சிறு கதை

பூஞ்சோலை தாமிரபரணி ஆற்றங்கரையில் அமைந்த ஒரு அழகிய கிராமம் .பேருக்கேற்ப வண்ண

வண்ண பறவைகள் பேசியும் பாடியும், கொஞ்சிக் குலாவும் பூக்களும் ,மா, பலா,வாழை ,கமுகு ,

தென்னை ஆகிய மரங்கள் அடர்ந்த சோலைகள் நிரம்பிய வளமான கிராமம் . மண் வளம் மிக்க

ஆண்ட கிராமத்தில் பயிர்கள் முப்போகம் கண்டன.இந்த கிராமத்தில் ஒரு புரதான வரதராஜ

பெருமாள் கோவிலும் ,பரமேஸ்வரன் கோவிலும் கிராமத்தின் பிரதான வீதியிலேய அமைந்து

உள்ளன.வரதராஜ பெருமாள் வரப்ரசாதி வேண்டியதை உடனுக்குடன் அள்ளி வழங்குபவன் .

இந்த கிராமத்தில் பிரதி ஆண்டு நடைபெறும் கருட சேர்வை ,பக்க கிராமங்கள் அல்லது

திருநெல்வேலி நகரத்திலிருந்தும் மக்கள் திறல் திரளாய் வந்து தரிசனம் செய்து திரும்புவர் .

இங்கு அமைந்துள்ள இஸ்வரனோ அர்த்தனாரீச்வரன் , சகல சர்ம ராகங்களை தன விபூதி

பிரசாதத்திலேய போக்க வல்லவன் . பூஞ்சோலை மக்கள் பண்பும்,பக்தியும் ஒருங்கே அமைந்த

பண்பாளர்கள் , விருந்தோம்பலை இன்றும் கை விடாதவர்கள் . வரதராஜ பெருமாள் கோவிலுக்கு

எதிரே ஒரு அழகிய ஆக்ரா ஹாரம். அங்கு ஒரு இருபது வீட்டில் இன்றும் க்ரமப்படி வேதா ஆகம

காரியங்களை பிரதான பணியாய் ஏற்று நடத்தும் வேதியர் குடும்பம் வசித்து வருகின்றனர் ;

சரி பாதி ஐய்யர், மற்ற பாதி ஐயெங்கர் .இந்த ஐயெங்கார் ஒருவர்தான் நம் ராஜா சர்மா அதாவது

சுந்தர ராஜா சர்மாவின் சுருக்கம் . அறுபது வயது நெருங்கும் அவருக்கு மனைவியாக அமைந்தவள் ;

மஞ்சுலவல்லி என்கிற மஞ்சு மாமி.இவர்களின் ஒரே செல்வா புத்ரி கௌசல்யா .பேருக்கேற்ற

தன்மைகள் அனைத்தும் பெற்ற பெண். நல்ல சிவப்பு நிறம் அத்துடன் சேர்ந்த தன்னடக்கம் கொண்ட

அழகு, தன்மையான பேசும் சுபாவம் அவளை பூஞ்சோலையில் சீதையாகவே கருட செய்தது .

கௌசல்யா இருபது வையடு சட்ற்றே தாண்டியவள் ; பௌதிகத்தில் கல்லூரியிலேய முதல்வளாக

தேர்வுபெற்று தற்போது ஆசிரியைப் பயிற்சிக்காக திருநெல்வேலி நகரின் பீ.எட் கல்லுரி ஒன்றில்

படித்து வருகிறாள் .



ராஜா சர்மா , வரதராஜ பெருமாள் கோவிலின் பிரதான அர்ச்சகர் ; வேதா சாஸ்திர விற்பன்னர்

ஊர் மக்களின் அபிமானம், மரியாதை இரண்டையும் இயல்பாய் பெற்றவர் .கோவிலில்

கிடைக்கும் சொல்ப சம்பாதியமும் கிராமத்து மக்கள் அவ்வபோது தாமாகவே அளிக்கும்

நெல் மற்றும் பலா காய்கள் கொண்டு வாழ்கையை ஒட்டிக்கொண்டு இருப்பவர் .மனைவி மஞ்சு

மாமி சிக்கனமாய் குடும்பம் நடத்தி தம் பெண்ணிற்கான தங்கம், வெள்ளி பொருட்களை

சிறுக சிறுக சேர்த்து வைப்பாள் .ராஜா சர்மாவும் அவ்வப்போது பக்கத்துக்கு ஊர்களில்

ஹோமம், யாகம் , நடத்தி அதில் வரும் சன்மானத்தை அப்படியே தம் அருமைப் பெண்ணின்

திருமண செலவிர்கேன்றே வயிறு வாயைக்கட்டி சேர்த்து வைப்பார்.



ராஜா சர்மா தம்பதிகளின் பெண் கௌசல்யா இப்போது திருமணத்திற்கு வயது வந்தவள் ஆனாள்.

ஆம் இருபத்தொரு வயது பூர்த்தியாகிற்று அவள் பெற்றோர் அன்றிலிருந்தே அவளுக்கு எற்ற

வரம் தேட ஆரம்பித்தனர் . பெண்ணின் ஜாதகம் அமோகமாக இருந்த நிலையில் எராளமான

பிள்ளை ஜாதகங்கள் அவர்களைத் தேடி வந்தன.அவற்றில் ஒன்று தான் சென்னையிலிருந்து வந்த

ஆண்ட ஜாதகம் .பிள்ளை லண்டனில் பெயர்பெற்ற நிறுவனம் ஒன்றில் சார்டர்ட் அக்கௌன்டன்ட் ;
நல்ல சம்பாத்தியம் ,நல்ல குணம் ,ஆசாரம் அனுஷ்டிப்பவன் கூட .குடும்பமும் இவர்கள்

குடும்பம் போல வைதீக குடும்பம் -அவர்களுக்கும் சின்ன குடும்பமே , ஒரு பிள்ளை ,ஒரு பெண்.

பெண் இன்னும் படித்துகொண்டு இருக்கிறாள் .


அடுத்தடுத்த வாரங்களில் ஜாதகங்கள் பரிமாறப்பட்டன -பொருத்தம் பார்த்தனர் இரு குடும்ப-

தினரும். ஜாதகங்கள் அமோகமாய்ப் பொருந்தி வர பிள்ளை வீட்டார் தாங்கள் பெண்ணை வந்து

பார்க்க விரும்புவதாய் தெரிவிக்க , நல்ல நாள் ஒன்று பார்த்து ராஜா சர்மா பிள்ளை வீட்டாரை

பெண் பார்க்க அழைத்தார்..



அது ஒரு வெள்ளிகிழமை நிறைந்த நன் நாள் ; மாதமோ திருமணத்திற்கே என்று சொல்லும்

தை மாதம் . ராஜா சர்மாவின் தமக்கை, அவர் கணவன் , மஞ்சு மாமியின் தங்கை அவர் புருஷன்

அழைக்கப் பட்டிருந்தனர். பிள்ளை வீட்டார் சரியான நேரத்திற்கு வந்து சேர, லௌகீகங்கல்

பரிமாறப்பட்டன. பெண் பிள்ளை வீட்டார் பரஸ்பர அறிமுகத்திற்கு பின்னே பெண் அழைக்கப்-

பட்டாள். பிள்ளை பெண்ணைப் பார்க்க பார்த்த எடுப்பிலேய புன்னகை சிந்த , அவன் விருப்பம்

உடனே வெளி வந்தது . பிள்ளைக்கு கர்நாடக சங்கீதத்தில் விருப்பம் அதிகம்.,ஈடுபாடும் அதிகம்

என்று பிள்ளையின் அம்மா தெரிவிக்க, பெண்ணின் பெற்றோர்களும் பெண்ணை உட்கார-

வைத்து ஒரு நல்ல சாகித்யம் பாட சொல்ல, கௌசல்யா தனது மெல்லிய அதி மதுர சாரிர=

தால், தம்புரா சுருதி சேர வரதராஜ உபாஸ் மகே என்ற முத்துசுவாமி தீட்சிதர் கிருதியைப் பாடி

முடித்தாள். பிள்ளை வீட்டார் பூரண திருப்தியுடன் தங்கள் சம்மட்டை தெரிவித்து மேற்படி

எப்போது நிச்சயம் செய்து தாம்பூலம் மாற்றிகொள்ளலாம் என்று வினவ , ராஜா சர்மாவின்

தமக்கையும் அவர் புருஷனும் , வீட்டில் மூத்தவர்கள் ஆதலால் சுபஸ்ய சீக்ரம் என்பதற்கு

ஏற்ப அடுத்த முகூர்த்த நாளில் தாம்பூலம் மாற்ற ஒப்புக்கொண்டனர். இவ்வாறே அந்த

நன் நாளில் திருமணம் இனிதே நிச்சயிக்கப் பட்டது. பிள்ளை வீட்டார் ராஜா சர்மா குடும்பத்திடம்

விடை பெறுகையில் திருமணத்தை ஆணி மாதத்தில் வைத்துகொள்ள வேண்டி, நகை-நட்டு

பெண்ணிற்கு அவர்கள் விருப்ப படியும், திருமணத்தை மட்டும் சென்னையில் விமரிசையாய்

நடத்தி கொடுக்கவும் என்ற கொக்கி ஒன்று போட்டு விட்டு சென்றனர்.



தான் வணங்கும் வரதராஜ பெருமாளையும் ,அவர் தனக்களித்த வேதா ஞானத்தையும் கண் முன்னே

நிறுத்தி தன பெண்ணின் திருமணம் தடங்கல் இல்லாமல் இனிதே நிறைவேற ஆத்மார்த்தமாய்

வேண்டி நிற்றார் ராஜா சர்மா. அவர் இல்லதரசியோ திருமணம் இனிதே நிறைவேற அங்கப்-

பிரதக்ஷணம் செய்வதாய் வேண்டிகொண்டாள்.



உத்தமர்கள் வேண்டுதல் வீணாவது இல்லை; பத்தினி வேண்டுதலுக்கு இறைவன் அப்போதே

வந்து உதவுவான்.


பூஞ்சோலை வரதராஜ சுவாமி பங்குனி உத்திர விழ வெகு விமரிசையாக நடைபெற்று கொண்டு

இருந்தது. நாலு நாட்களுக்கு கச்சேரி, காலட்சேபம் ஏற்பாடு. மூன்றாம் நாள் மாலை ,மஹா பிரசிதி

பெற்ற ஹரிகேசவநல்லூர் வேம்பு ஐயர் கஜேந்திர மோக்ஷம் காலட்சேபம். ஐயர் வாள், நமது

ராஜா சர்மாவின் பால்ய சிநேகிதர். ஒன்றாகவே வேடம் கட்ற்றவர்கள் .இந்நாள் வரை நட்பை

பெரும் பொக்கிஷமாய் போற்றி வளர்பவர்கள். பிரம்மஸ்ரீ வேம்பு ஐயர் ஜாமீன் பரம்பரை.வசதி

படைத்தவர். வெளி நாடுகளுக்கும் சென்று காலட்சேபம் செய்பவர்.திருமணமாகி முப்பது வருடம்

ஆகியும் குழந்தை பாகியம் இல்லை; அதற்காக வருந்தி இருந்த களம் போய் இப்போதேல்லாம்

ஈட்டிய பொருளெல்லாம் இல்லற்கே என்று இருப்பவர். வாரி வாரி வழங்கும் இன்றைய கோடை

வள்ளல் . அன்னாரின் காலட்சேபம் கேட்க மக்கள் ஆயிரம் ஆயிரமாய் திறந்டுவருவர் .அப்படியொரு

ஆகர்ஷன சக்தி அந்த காலத்சேபதிற்கு. அன்றும் பங்குனி உத்திர மூன்றாம் நாள் பூஞ்சோலை

வரதராஜ பெருமாள் சன்னதி முன் நடந்த கால ஷேபதிற்கு மக்கள் திரண்டு வந்தனர். மூன்று மணி

நேரம் தன்னையே மறந்து வேம்பு ஐயர் கட காலட்சேபம் செய்து முடித்தார். அதில் லயித்த மக்கள்

செல்ல மனமில்லாமல் இல்லம் திரும்பினர். அன்று அவர்கள் ஐயெருக்கு செய்ட மரியாதை ,

ரொக்கமாக இரண்டு லக்ஷம் ருபாய் , ஒருவர் யாரென்று தெரியவில்லை, ஐந்து சவரன் தங்க

சங்கிலி பொன்னாடை என்று குவிந்தன.


கூட்டம் குறைந்த பின்னே தன நண்பன் சம்புவை பிரம்மஸ்ரீ சம்பு ஐயெரை ராஜா சர்மா பார்த்து

தெண்டம் சமர்ப்பித்து விடை பெற்றார். செல்லும் முன் தம் இல்லத்திற்கு வருகை தந்து தன்னை

கௌரவிக்க வேண்டினார். புண் முறுவல் செய்த ஐயர் வாள் அன்றே , அன்றிரவே தன பால்ய நண்பன்

இல்லம் சென்றடைந்தார்.ஒருவருக்கொருவர் பரஸ்பர குசலம் விசாரித்த பின்னர் ராஜா சர்மா

தன பெண் கௌசல்யாவின் திருமணம் நிச்சயம் பற்றி விவரித்தார். இங்கிதமாய் அன்னாரின்

பண முடக்கம் அறிந்த ஐயர் வாள், அன்று தமக்கு நன்கொடையை மக்கள் அளித்த இரண்டு லக்ஷம்

ரொக்கம் மற்றும் ஐந்து சவரன் தங்க செயின் கொடுத்தல்லாமல் ,தான் அணிந்திருந்த எட்டு சவரன்

வைரம் படித்த அடிகையை ராஜு சர்மாவிற்கு அளித்து திருமணத்தை நல்ல படியாக நடத்த
நண்பன் என்ற ஹோதாவில் ஆணையே இட்டார் .

ராஜா சர்மாவும் அவர் manai
வியும் ஸ்தம்பித்து நின்றனர்.


தாம் எதிரே காண்பது கனவா நினைவா என்று நினைத்து, தாம் எதிரே காண்பது அந்த வரதனே

ஐயர் வாள் ரூபத்தில் வந்தாரோ என்று மனதிற்குள் எண்ணினார் .


கண்ணா என்று கூப்பிட உடனே வந்து அன்று த்ரவ்பதிக்கு அபயம் தந்தான் ; ஆதிமூல என்று கதறிய

கஜேன்றனுக்கு அபயம்; இன்று தன பெண்ணிற்காக வேண்டிநின்ற நம் ராஜா சர்மா ப்ரோஹிடருக்கு

அவர் பால்ய நண்பர் உருவில் வந்து வரம் தந்தான் வரதன்.


ஆனி 24 வந்தது. ராஜா சர்மா தன மனைவி மற்றும் பரிவாரம் சூழ சென்னையில் வெகு விமரிசையாக

தம் பெண் கௌசல்யவிர்கு இனிதே திருமணம் நடத்தி வைத்தனர் .

அன்று இரவு நடந்த ரேசெப்ஷனுக்கு ஸ்பெஷல் பிரமஸ்ரீ வேம்பு ஐயர் நடத்திய "ருக்குமணி கல்யாணம்"

எழுதியவர் : வாசவன்-வாசுதேவன்-tamilpithan (28-Jun-15, 12:52 pm)
பார்வை : 457

மேலே