இளைஞனே எழு இளைஞனே எழு

இளைஞனே எழு இளைஞனே எழு
இன்னுமென்ன உறக்கம்
இளைஞனே எழு

சிறகு இரண்டு தருகின்றேன்
நீ வானம் தொட்டு வாடா
செதில்கள் இரண்டு தருகின்றேன்
நீ ஆழி அளந்து வாடா
ஏழாமறிவும் தருகின்றேன்
இச்ஜெகத்தை வென்று வாடா

கனவு காண் கனவு காண்
கனவு காணடா
கனவை மட்டும் கண்டு கண்டு
கனவை வாழ்க்கை ஆக்காதே
காலம் போனால் திரும்பாதே..

கனவை நீயும் கலைத்திடுடா
தினமும் நீயும் உழைத்திடுடா
வெற்றிக் கனிகள் பறித்து நீயும்
உன் கனவின் பசிக்கு உணவாக்கடா

இனிவரும் காலம் இளைஞர்கள் காலம்
என்று யாரும் சொல்ல வேண்டாம்
இருக்கின்ற காலம் இளைஞர்கள் காலம்
இன்னும் என்ன தயக்கமடா
எழுந்து வெற்றி கொள்ளடா

நேற்று என்பது தொலைந்து போனது
நாளை என்பது தொலைவில் உள்ளது
இன்று மட்டும் உன் கையில் உள்ளது
எட்டு வைத்து செல்லடா- நீ
எட்டு திசையும் வெல்லடா

வெற்றி எனும் பூப்பறிக்க-உன்
வியர்வைத் துளிகளை நீராக்கு
உன் உழைப்பு முழுவதும் உரமாக்கு
நம்பிக்கையெனும் நார்கொண்டு வெற்றிமாலை நீ கட்டடா
வெல்லும் தோளில் நீ சூட்டடா..

எட்டிப்பார் வெற்றியின் முகம் தெரியும்
தட்டிப்பார் வெற்றியின் தாழ் திறக்கும்
முட்டிப்பார் தோல்வியின் முகம் உடையும்
மோதிப்பார் தோல்வியும் தோற்றிடும் உன்னிடம்

படுத்து நீயும் கிடந்தால்
படுக்கைக் கூட பகைதானடா
எழுந்து நீயும் நடந்தால்
இமயமும் உனக்கு படிதானடா

இளைஞனே எழு இளைஞனே எழு
இன்னுமென்ன உறக்கம்
இளைஞனே எழு

எழுதியவர் : மணி அமரன் (28-Jun-15, 9:01 pm)
பார்வை : 805

மேலே