கற்பூரவல்லி - இரு விகற்ப நேரிசை வெண்பா

2011 ல் புதுக்கவிதை

கற்பூரவல்லி பிடிக்குமென்றேன்;
மனைவி கேட்டாள்,
கற்பூரவல்லியா! கற்பகவல்லியா என்று!!
சந்தேகம் தீராத வியாதி.

2015 ல் இரு விகற்ப நேரிசை வெண்பா

கற்பூர வல்லி பிடிக்குமென்றேன்; கேட்டாளே
கற்பூர வல்லியா? அல்லது - கற்பக
வல்லியா? சந்தேகம் தீராத ஓர்வியாதி
அல்லவோ என்மனைவிக் கு!

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (28-Jun-15, 9:40 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 83

மேலே