பூ கொய்தல் - நேரிசை வெண்பா
2011 ல் புதுக்கவிதை
நித்தம் நித்தம் பூ பிடுங்கும்
உலகநாதன் ஊரிலில்லை
இன்று செடிகளில் செம்பருத்தி
பூக்கள் பூத்துக் குலுங்குகின்றன.
பூவைப் பிடுங்குதல் கொடுமையானது.
பூ கொய்தல் மென்மையானது.
2015 ல் இரு விகற்ப நேரிசை வெண்பா
எத்தனையோ பூக்களுள்ள செம்பருத்தி தோட்டத்தில்
நித்தநித்தம் பூபிடுங்கும் நீசனே - அத்தனையும்
கொய்யாதே பூத்துக் குலுங்கட்டும் பூக்களுமே
மெய்யாய் மகிழும் அவை!