ஆறறிவுள்ள மனிதன்

மரங்களில் இளைப்பாறும் பறவைகள்,
மரக்கிளைகள் உடைந்து விடுமோ என்ற
கவலை கொஞ்சமும் அவைகளுக்கில்லை
பறவைகள் நம்புவது அதன் சிறகுகளை மட்டுமே!

ஆறறிவுள்ள மனிதன் வேட்டையாடுகிறான்,
அவைகளை கண்ணி வைத்துப் பிடிக்கிறான் -ஆனால்,
ஆறாவது அறிவு பறவைகளுக்கு இல்லை,
அதனால் மனிதர்களிடம் எந்த சந்தேகமுமில்லை,

இரவினில் பறவைகள் உறங்கும் வேளையில்
இடிபோல தடியால் அடித்துப் பிடிக்கிறான்
இது வெளிநாட்டில் வீர விளையாட்டாம்!
இதன் பெயர் Bat fowling!

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (28-Jun-15, 10:19 pm)
பார்வை : 566

மேலே