என் - ஏன்
என் பொது அறிவு
என் உலக அறிவு
என் வரலாற்று அறிவு
என் அரசியல் ஞானம்
என் சமூகப் பார்வை
என் குறுகிய உள்ளம்
என் பரந்த உள்ளம்
என் காமாலைப் பார்வை
என் விருப்பும் வெறுப்பும்
என் மனம் மீறும் சாடல்
என் மனம் அடங்கும் அமைதி
என் மணற்கேணி ஊற்று
என் மன மலர் நீட்டம்
என் மகிழ்ச்சியின் மையங்கள்
என் சோகத்தின் தீண்டல்கள்
எல்லாம் இவை என்பது
என் கண் முன் தினம்
காட்சிப் பிழையாய் தோன்றும்
ஊடகங்கள் நிர்ணயிக்கும் எனில்
என்று நான் நானாவது ....?
------ முரளி