வரம்

டெடிபியர் பொம்மை... ஐபேடு....
பார்பிகேர்ள் கவுன்... டிஜிட்டல் சிலேட்டு
சாக்லேட் கேக்.. பிங்கலர் பிரஷ்..
இனித்துக்கொண்டே இருக்கும் பேஸ்ட்... என
சகலமும்
காட்டிக்கொண்டிருந்த இஞ்சினியர் மகளின்
வாய்பார்த்து
நின்றிருந்த கொத்தனார் மகள் .....
சட்டென ஞாபகம் வந்தவளாய்..
தம்பி முழிச்சிருப்பான்... சாப்பாடு ஊட்டனும்
அம்மா அடிப்பாங்க என
ஓடிவிடுகிறாள்....
பொம்மையிடம் கண்டிப்பாக
சொல்லிக் கொண்டிருக்கிறாள் இஞ்சினியர் மகள்......
இன்னைக்கி டாடி வந்ததும்
தம்பி வாங்கித்தரச் சொல்லணும்
சரியா....?

எழுதியவர் : கட்டாரி (29-Jun-15, 9:22 am)
Tanglish : varam
பார்வை : 116

மேலே