நீ இருக்கையில் உன்னை நினைக்கவில்லை,

நீ இருக்கையில் உன்னை நினைக்கவில்லை,

உன்னை இழந்தபின் உன்னை மறக்கவில்லை,

நான் அழுது புலம்பியே பழக்கமில்லை, -அனால்

வழியும் நீருக்கோ இறக்கமில்லை...



ஏனோ? என்னை உயிர் விட்டு கொன்றாய்...

ஏனோ? என்னை உடல் விட்டு தின்றாய்...

ஏனோ? என்னை அழுதிட செய்தாய்...

ஏனோ? என்னை அழுகிட செய்தாய்...



வாழும்போதே சாகும்வலியினை சாகும் வரையிலே காண செய்கிறாய்...

காணும்போதே காணுமிடமெல்லாம் கானல் நீரிலே உன்னை வைக்கிறாய்...

நொடி முள் நகர நெஞ்சின் ஆழம்வரை குத்தி கீறி முள் நினைவு தைக்கிறாய்...

குரூர இரவை குரல்வளை விஷமாய் விடியல் வரையிலே விழுங்க செய்கிறாய்..

எழுதியவர் : யாசுதாசன் (14-May-11, 10:24 am)
சேர்த்தது : pOp SamEeR
பார்வை : 454

மேலே