உன்னை தொலைத்த நான்
உரமிட்டு பாதுகாத்து
எனக்கெனச் சொந்தமாய் எண்ணி
எப்பொழுது மலர்வாய் என நானும்
முப்பொழுதும் உன் கருத்தில் என நீயும்
நாளொரு மேனியும்
பொழுதொரு வண்ணமுமாய்,
நீ மலர காத்திருக்க,
உரிமை என ஒருவன் வந்து
கேளாமல் பறித்துச் செல்ல,
உன்னைப் பறிகொடுத்த வலியில்,
ரோஜாவின் முட்கள் யாவும்
தொட்டால் குத்திட,
என்னிதயம் சூழ்ந்த உன் நினைவுகள்
நினைத்தாலே குத்துகிறதே...