கனவுகள் பலவிதம்
கனவுகள் பலவிதம்,
ஒவ்வொன்றும் ஒருவிதம்;
மகிழ்ச்சிக் கனவுகள்,
வருத்தக் கனவுகள்;
தேவதைக் கனவுகள்,
பேய்க் கனவுகள்;
விநோதக் கனவுகள்,
தனிமைக் கனவுகள்;
அழகிய நடிகைக் கனவுகள்,
இனிய தோழிக் கனவுகள்;
பகல் கனவுகள்,
இரவுக் கனவுகள்;
கற்பனைக் கனவுகள்,
நிஜக் கனவுகள்;
ஆழ்மன எண்ணங்களின்
பிரதிபலிப்பே நம் கனவுகள்.