பொற்பாதங்கள்

கொஞ்சும் சதங்கையே
உனது
முகாரி ராகத்திற்கு
அவள்
முற்றுபுள்ளி வைத்தபின்னும்
இமைக்காமல்
என்விழிகள்
இம்சிக்கிறதே !
ஓ !
நீ ! கட்டித்தழுவிய
அப்பதங்களுக்கு
மெட்டி இட
எனை துண்டுகிறதோ !
கண்டாயோ !
இரத்த வரி வடுக்களை ,
நானங்கு கண்டேன் !
குருதி படர்ந்த
இரு பஞ்சம
கோவைப்பழங்கள்
அவை
தாமரை பொற்ப்பாதங்களின்
தளிர்கள் போலும்,
அங்கே,
பெண்களின்
விடியலை உணர்த்திய
கதிரவன் நிழலோ !

எழுதியவர் : கே.அன்பரசு (29-Jun-15, 7:16 pm)
பார்வை : 120

மேலே