அண்டார்டிக் கண்களே
 
            	    
                அன்பே.!
உன் நெற்றியின் 
குங்கும பொட்டே
புவியின் மையப்புள்ளி.!
உன் கண்களே
அண்டார்டிக்கடல்.!
அதில் உன் இருபுருவங்களையே
துடுப்பாய் அமைத்து கரைசேர்க்க
முயல்கிறேன்-என் காதல் படகை.!
ஆனால்.!
நீ உன் கண்ணீர் அலைகளால்
என்னை மூழ்கடிக்கிறாயே.!!
	    
                
