வேலை இல்லா பட்டதாரி
ஒன்றுக்கும் உதவாத "உதவாக்கரை "
வேலை ஏதும் செய்யாத "சோம்பேறி "
பயனற்று கிடக்கும் "புறம்போக்கு"
எத்தனை பெயர் தான் எனக்கு
ஒற்றை வேலை இல்லாத காரணத்தால்
பெயருக்கு பெற்றேன் பட்டம் ஒன்று
அதனால் எனக்கொரு பயனும் இல்லை இன்று
எல்லோரும் தருகின்ற பெயருக்கு பின்னால்
கூடுதலாய் ஒரு சுமை
பட்டதாரி என்று... !!!
படித்தது என்னவோ பொறியியல் துறை
அதை வைத்து இங்கு தேடினால்
வேலை கிடைப்பது இல்லை
மென்பொருள் நிறுவனம் பார்பதெல்லாம்
ஆங்கில ஞானம் அன்றி ஏதும் இல்லை
ஏனோ அது மட்டும் சரியாய் வரவும் இல்லை
வேலை வாய்ப்பு உள்ள படிப்பு இது தான் என்று
கூட்டம் கூட்டமாய் சொல்லினர் என் உறவினர் அன்று
தேடி பார்க்கிறேன் அவர்களை
மனதினில் இருந்து ஒரு கேள்வி கேட்கவென்று
வருடத்திற்கு தமிழகத்தில் தோன்றும் பொறியியலாளர்கள் பலரினுள்
வேலை கிடைத்ததாய் சொல்பவர் எண்ணிக்கை என்னவென்று ...???
ஓய்ந்து போன கால்களுக்கு நடந்து செல்ல பாதை இல்லை
தோய்ந்த போன மனதிற்கு விண்ணப்பம் அனுப்ப விருப்பம் இல்லை
உலர்ந்து போன உதடிற்கு பதில் சொல்ல திராணி இல்லை
மீதம் உள்ள தெம்பை கொண்டு
கை ஏந்தி கேட்டேன் வேலை ஒன்றை
பொறியியல் பட்டம் தரவில்லை
மேல் படிப்பும் தரவில்லை
என் வேகம் தான் தந்தது எனக்கு
மள்ளிகை கடையில் பொட்டலம் மடிக்கும் வேலை ஒன்றை...!!!!