சமுதாய பச்சோந்தி
இடத்திற்கேற்ப தன் நிறத்தை
மாற்றிக்கொள்ளும் பச்சோந்தியோ
இந்த சமுதாயம்.!
அது பணத்தைக்கண்டால்
பச்சை நிறம் காட்டுகிறது.!
குணத்தைக்கண்டால்
சிகப்பு நிறம் காட்டுகிறது.!
ஆன்மிகம் வந்தால்
காவி நிறமாக மாறுகிறது.!
போராட்டம் வந்தால்
கறுப்பு நிறமாக மாறுகிறது.!
விதவைகள் என்றால்
வெள்ளை நிறமே என்கிறது.!
அரசியல் என்றால்
பச்சோந்தியே நிறமறியா.?
அரசியல் கொடிகளின்
நிறமே சமுதாயத்தின் நிறம்.!
என்ன நிறமோ..????
சிறந்த கவிதைகள்
புதிய படைப்புகள்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
