சுமைதாங்கி
வழிப்போக்கர்கள்
இளைப்பாறவே
வலிகள் தாங்கும்
சுமைதாங்கி கற்கள்! இதில்
இவை என்றும்
சுகப்படுவதில்லை
துயரப்படுவதில்லை!
வந்தவர் போனால்
வருபவர் அமர்வார்!
பாரம் தாங்கும் மனதிடம் கூட
பாசம் தேடாது மனிதம்!
சுமைதாங்கி போலவே
சுயநலம் தேடும்!
சுமைதாங்கிக்கு
சுமைகள் கூடியே போகும்
சோர்வதுமி்ல்லை
நகர்வதுமில்லை!