சமையல்

காடு நோக்கிய
பயணத்திலும்
கட்டை அடுப்பில்
கறிகாயுடன் பாகம்!
கையூன்றி பணி செய்தாலும்
கையேந்தி வாழவில்லை!
காப்பாற்ற ஆளில்லாவிடினும்
வயிறை காப்பாற்ற
வியஞ்சனம் செய்கிறேன்!
வயிறு என்ற ஒன்று
உள்ளவரை
சமையல் என்பது
நீங்காத வேலை பெண்களுக்கு!
உயிரோடு இருக்கும் வரை
உயிர் காக்க வேண்டிய
உணவுத் தேடல் - சமையல்!

எழுதியவர் : சுமித்ரா விஷ்ணு (1-Jul-15, 3:24 pm)
Tanglish : samayal
பார்வை : 85

மேலே