வெறும் காகிதமே

கனவுக்கு இரவு வேண்டும்
கவிதைக்கு காதல் வேண்டும்
காதலிக்க ஒரு பெண் வேண்டும்
பெண்ணுக்கு அழகு வேண்டும்
மாலை சாயும்போது அவள்
தோளில் வந்து சாய வேண்டும்
இல்லையெனில்
மாலையும் தென்றலும்
இந்த இளமையும்
எழுதப்படாத வெறும் காகிதமே !
___கவின் சாரலன்

எழுதியவர் : கவின் சாரலன் (1-Jul-15, 10:41 pm)
Tanglish : verum kaagidhame
பார்வை : 75

மேலே