ஒருதலை காதல் வரம்
யதார்தமாய் பார்த்த பார்வைக்கு
எக்கசக்கமாய் கற்பனை செய்யும்-
யாரோ இசையமைத்த பாடலுக்கு
தன்னை நாயகனாய் சித்தரித்துக் கொள்ளும்..
தென்றலென பெண்ணவள் கடந்து செல்ல
சுவாசிக்க காற்றினை கடன் கேட்கும்-
தீண்டாத தூரத்தில் நின்றுகொண்டு
தேயாத வண்ணம் காதல் பேசும்...
இசை இளையராஜாவை நாடும்
இதயம் சிம்பொனிகள் பாடும்
காலையிலும் கனவுகள் தொடரும்
காகிதமும் கதைகள் சொல்லும்
இருமனம் நிகழ்த்திடும் காதலும்
ஒருதலை காதலின் சுகம் தருமோ ? ?
புதுவித மோகம் தரும்
சாமானியனுக்கும் கிட்டும்
இந்த ஒருதலைகாதல் வரம்...
-NBR