ஆசையாய் பேச

ஆசையாய் பேசிட
அவஸ்தைகள்
ஆயிரம்
காண்கிறேனே.....

அங்கும் இங்குமாய்
தனித்துப் போனோம்.....
இனிமையான

வாழ்வை
மௌனித்து
வாழ்கிறோம்......

கண்ணே மணியே
என்று
மனசார
பேசுகிறேன்....உன்
தவிப்பில்
தவிர்த்துக்
கொண்டேன்
ஊன் உறக்கம்.....

தனிமையை
நான்
அறிவேன்.....
இது தொடர்வதை
யார்
அறிவார்.....?

காலங்கள்
ஓடும்
மாயம்....கண்டு
காயங்கள்
கொண்டது
என்
உள்ளங்கள்......

பொருளாதார
தேடலில்
தொலைவினில்
தொலைந்தது
நிம்மதி.....

துணைக்கு
துணையாய்
இருந்து விட.....
விருப்பம் கொள்ளுதடி.....
ஆனாலும்
இங்கே
தனிமை
இன்னுமின்னும்
நீளுதடி......

எழுதியவர் : thampu (3-Jul-15, 11:18 am)
Tanglish : aasaiyaai PESA
பார்வை : 92

மேலே