அவள்

சித்திரை மாதம்
இள நித்திரை நேரம் என்
விழித்திரையில் விழுந்து
மனத்திரையில் பதித்தாள்
காதல் முத்திரை...

நித்தம் நூறு முத்தம் தந்து
என் சித்தம் கலங்க வைத்தாள்.
தினம் புத்தம் புது பார்வை வீசி
பித்தம் கொள்ள செய்தால்.
நங்கை அவள் என்னோடு நடக்கையில்
நத்தை வேகம் கொண்டாள்.
ஒரு நொடி கண் பட்டு
மறு நொடி மறையும் வித்தை கற்றவள் அதில் விந்தை இல்லை..

--தாகு

எழுதியவர் : thaagu (14-May-11, 7:06 pm)
சேர்த்தது :
Tanglish : aval
பார்வை : 504

மேலே