நீ

நீ

வீசிய வாசத்திற்கு விசுவாசமாக
உன் கூந்தலை தந்துவிட்டேன் பூக்களுக்கு...

உன்னை போல் மாறாட்டம்
இன்னும் கைது செய்யபடாத பூந்தோட்டம்..

பசி தீரவில்லை
நீ மிச்சம் வைத்த சோற்றுக்கு..

நீ சுவாசிக்கிறாய்
போதை ஏறுகிறது காற்றுக்கு...

நீ அமர்ந்தது போதும்
எழுந்து செல்
நாற்காலிக்கு கை முளைத்துவிட போகிறது..

பூக்களுக்கு வண்ணம் தீட்டுவது வீண் வேலை..
உன் கைகளில் மருதாணி வைப்பதை விட்டுவிடு..

நீ நகம் வெட்டி வீசுகிறாய்
பூமிக்கு கிடைத்துவிட்டது
புது ரக பூ விதை..

காந்தங்களுக்கு இரு துருவம் உண்டாம்
சொல்லிவிடு..
உன் விழிகளில் எடு வட துருவம்
தென் துருவம்?!!!

உன் விழிகளுக்கு அருகே அபாய சின்னத்தை ஒட்டிக்கொள்..
அதை பார்த்து தானே அதிகம் பேர் தடம் புரள்கிறார்கள்....

உன் நினைவால் சுவாசிக்க பழகிய பின்பு
வெறும் ஆக்சிஜனால் மூச்சு திணறல் எனக்கு...


எழுதியவர் : thaagu (14-May-11, 6:48 pm)
Tanglish : nee
பார்வை : 494

மேலே