சாதனை
கபில் தேவாக, ரஜினியாக,
ஒரு ஐ.ஏ.எஸ் ..
ஒரு ஐ .பி. எஸ்..
காமராஜர் போல
ஒரு சி.எம்மாக
எல்லாம் ஆக..
முடியாதுபோக ..
கவிதை எழுதி
பாரதி..முதல்
யுகபாரதி வரை ..
போல எதுவும்
ஆக மாற வில்லை ..
நான் நானாகத்தான்
இருக்கிறேன் ..
இதுவரை..
அதுவே ஒரு சாதனை !