முத்தான பிள்ளைகள்

சின்னஞ் சிறு பிள்ளைகள்
பட்டுப் போன்ற பிள்ளைகள்;
பட்டாம் பூச்சி போலவே
பறக்கப் போகும் பிள்ளைகள்.

பாலே நடனம் ஆடவே
காத்திருக்கும் பிள்ளைகள்;
பாட்டுப்பாடி ஆடுமே
சிங்கார சீனப் பிள்ளைகள்.

ஒவ்வொன்றும் ஒருவிதம்,
மூன்று வயது நிரம்பிய
முத்தான பிள்ளைகள்;
வாழ்க! வாழ்க!! வாழ்கவே!!!

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (5-Jul-15, 8:43 pm)
பார்வை : 140

மேலே