பத்து வருடம் கூடுதல் வாழ

பத்து நிமிடம் முன்னதாக.. பத்து வருடம் கூடுதல் வாழ

ஒரு விமானத்தைப் பிடிக்க இரண்டு வழிகள் உண்டு.

நீங்கள் அடிக்கடி விமானத்தில் செல்பவர் என்றால், நீங்கள் அதிகமாக உள்ள அந்த வகையைச் சேர்ந்தவராகத்தான் இருக்க வேண்டும்........

மெல்லச் செல்லும் போக்குவரத்து நெரிசலால் மன உளைச்சல், ஓட்டுனரை வேகமாகச் செல்ல உந்துதல், போக்குவரத்து சமிக்கைகளை மீற எண்ணுதல், விமான நிலையத்துள் அடிக்கடி கை கடிகாரத்தைப் பார்த்துக் கொண்டே ஓடுதல். ஒவ்வொரு வரிசையிலும், முன் செல்ல எல்லோரிடமும் நமக்கு சிறிது தாமதமாகி விட்டதை விளக்கிக் கொண்டே வரிசையை மீற முயலுதல். ஆரம்பத்தில் சிறிது வேக நடை, கொஞ்சம் கொஞ்சமாக ஓட்டமாக மாற முகத்தில் இறுக்கத்தை மறைத்த புன்னகையுடன், ஒவ்வொருவரிடமும் விளக்கிக் கொண்டே அடிச்சுப் பிடிச்சு கடைசியில் விமானத்தில் அப்பாடா என்று ஏறுவது ஒரு வழி.....

இல்லை பத்து நிமிடங்கள் முன்னதாகக் கிளம்பி சாவகாசமாக விமானத்தைப் பிடிப்பது இன்னொரு வழி.
****

ஒவ்வொரு வீட்டிலும் காலை நேரத்தை இரண்டு விதமாக ஆரம்பிக்கலாம்....

ஒன்று ஒரு யுத்த களம் போல். எல்லோரும் ஓடிக் கொண்டிருப்பர். ஒவ்வொருவரும் மற்றவருக்கு ஏதேனும் வேலை செய்யச் சொல்லிக் கொண்டிருப்பர். தொலைபேசி மணி அடித்தால் மற்றவர் எடுப்பர் என எதிர்பார்ப்பர். வாயில் மணி அடித்தால் காதில் விழாதது போல் பாராமுகம் காப்பர். பள்ளி வாகனம் தெரு முனை தாண்டியிருக்க, லன்ச் பாக்ஸ் எங்கே, தண்ணீர் குப்பி எங்கே, புத்தகப் பையை சரியாக மூடினாயா, பஸ்சில் ஏறிக்கொள், மறக்காமல் ஷூ லேஸ் கட்டிக்கொள்... அப்பாடா .... ஒரு ராக்கெட்டைச் செலுத்துவது போல்..... 10..... 9.....8..... ம்ம்ம்....

மாற்று வழி.... '10 நிமிடங்கள் முன்னே' விழிப்பது.

'அவசரம்' எல்லாவித போதை அடிமைத்தனங்களில் மிக அபாயகரமானது....
நாம் விரும்பாத முடிவுகளை எடுக்க நம்மை நிர்பந்தப் படுத்ததும்.
நாம் செய்ய விரும்பாத செய்யல்களைச் செய்ய நிர்பந்திக்கும்...
சூழ்னிலைதான் தவறு என்று நம்பவைத்து ஏமாற்றும்... தவறான முடிவெடுத்தலுக்கும், குறைபாடன செய்யல்பாட்டுக்கும் 'அவசரமே' மூல காரணம்...
அது நாம் செய்யும் அனைத்து முட்டாள்தனமான செய்யல்களையும் சரி என்று மாயத் தோற்றமளிக்க வல்லது - வரிசையை மீற முயல்வதிலிருந்து, விமானத்தைப் பிடிக்க ஓடுவது வரை....

கடினமான முடிவுகள் எப்பொழுதும் நல்ல முடிவுகளே..

'10 நிமிட முன்னே' என்பது ஆரம்பத்தில் முட்டாள்தனமாகத் தோன்றலாம்... ஆனால் அதுதான் இன்றய 'நரம்புத் தளர்ச்சிக்கு' சரியான மாற்று..
இன்று மனிதன் எதிர்கொள்ளும் எல்லா 'மன அழுத்த' நோய்களுக்கும் '10 நிமிட முன்னே' தான் மாமருந்து.

'10 நிமிட முன்னே' என்பது எந்த நெருக்கடி இல்லாமல் நேரத்துடன் செய்யலாற்ற உதவும்..

'10 நிமிட முன்னே' என்பது என் இதயம் பத்து மடங்கு மெதுவாக அடிக்கும்.... நான் பத்து வருடம் கூடுதாலாக வாழலாம்....

---- முரளி
Source: Translation from Shree TT Rangarajan's Unposted Letter....

எழுதியவர் : முரளி (6-Jul-15, 7:49 am)
பார்வை : 174

சிறந்த கட்டுரைகள்

மேலே