என்னவளுக்கு இன்று பிறந்தநாள் - உதயா

( என்னவளுக்கு இன்று பிறந்தநாள் )

நீ என்னை முதன் முதலில்
டா போட்டு அழைத்துவிட்டு
சாரி தெரியாம சொல்லிடனென
என்னிடம் மன்னிப்பு கேக்கும் போது
என்னுள் மலர தொடங்கியதடி
இதுவரை என்னுள் மலராத
பூக்கள் ..!

அன்று முதன் முதலில்
மெசேஜில் நீ கொடுத்தம் முத்தத்திற்கு
இன்று நீ ஆயிரம் முத்தம்
கொடுத்தாலும் இணையாகவில்லையடி..!

எல்லோரும்
ஐ லவ் யு என்று சொல்லி
காதலை தொடக்கி
வாழ்ந்துக்கொண்டிருக்கையில்
நான் மட்டும் உன்னிடம்
உன்னை பொண்டாட்டி என்று
அழைத்துக் கொள்ளவா என்று கேட்டதும்
யோசிக்காமல் நீ சரி என்று சொன்னாய்
நானோ அப்படியென்றால்
என்னை மாமா என்று
அழையென நான் கேட்டதும்
ச்ச்சீ போடா மாமா
எனக்கு வெக்கமா இருக்கு என்று
நீ சொல்லும் போது
நான் மெய் மறந்து
நம் காதல் வானில்
பறந்துக் கொண்டிருந்தேனடி ..!

அன்று ஒருநாள்
வெகு நேரமாக
மாமா முத்தம் தாடானு
நீ கேக்கும் போது
நான் முடியாது
என்று சொன்னதும்
நீ கோபித்துக் கொண்டு
அந்த பக்கம் திரும்பிக் கொண்டாய்
நானோ திருட்டுத்தனமாய்
உன் கழுத்தில் முத்தம்
கொடுத்ததும்
ச்ச்சீ போடா பொறுக்கி என்று
என்னுடம் செல்லமாய்
சண்டை போட்ட போது
இதுவரை நான் அனுபவித்த
வலிகளெல்லாம்
மறைந்து போனதுடி ..!

என் வாழ்வின்
ஒளியாய்
என் உலகமாய்
என் உயிராய்
என் உடலாய்
என் உணர்வாய்
வாழ்பவளே
இந்நாளில்தான்
நீ பிறந்தாயா ..?

கேளடி என் தங்கமே
என்ன வேண்டும் உனக்கு ..?

சமுத்திரத்தை
பூவாய் மாற்றி
இமயத்தை
நூலாய் திரித்து
மண்ணினை
மணமாய் தூவி
உனக்கு மாலையிடவாடி ..?

இரவில்
வானத்தில் கொட்டிக் கிடக்கும்
விண்மீனை முத்துகளாக
கொலுசினில் பூட்டி
உன் காலினில் மாட்டி
அழகு பார்க்கவாடி ..!

முழங்கும் மின்னலை பிடித்தும்
நவரத்தினங்களை கோர்த்து
உன் கழுத்தினில் மாட்டி
நானே பொறாமைபடவாடி ..?

மென்மையாய் பரவும்
தென்றலை பிடித்து
மெத்தையாக்கி
உன்னை தாலாட்டவாடி ..?

கேளடி என் செல்லமே
என்ன வேண்டும் உனக்கு
தயங்காமல் கேள் ....

எழுதியவர் : உதயா (7-Jul-15, 7:12 am)
பார்வை : 12230

மேலே