தொலைந்த காதல்

நீயும் நானும் யாரோ இன்று
நினைவில் வாழக் கற்றது நன்று!

காலன் என்ன செய்தால் என்ன?
காதல் செய்து வாழ்வோம் நாம்!

வாதம் வந்து வீழ்ந்தால் என்ன?
வார்த்தை ஒன்றில் சேர்வோம் நாம்!

முகிலின் மடியில் உறங்கும் மலராய்
நினைத்தே உனக்குக் கவி படித்தேன்!
கலையும் இந்த முகிலைப் போலே
உனையும் ஓர்நாள் தொலைத்துவிட்டேன்!

இன்று நினைவுகள் மட்டும் உள்ளதடி
இது நிதர்சனமான உண்மையடி!

எழுதியவர் : பெருமாள் (7-Jul-15, 6:49 am)
Tanglish : tholaintha kaadhal
பார்வை : 120

மேலே