காவியமானவள்-09

சரிங்க அப்பா...மணி 6.30 ஆகிருச்சு இன்னும் ஒரு மணி நேரமாச்சும் படிக்கணும் நேரமா படுத்தாதான் காலைல சீக்கிரம் எழுந்து கல்லூரி கிளம்ப முடியும் நீங்க ப்ரஸ் ஆகுங்க...
என சொல்லிவிட்டு தனது அரைக்குள் நுளைந்தான் ஆனந்த்...
சேகர் தேனீர் பருகி முடித்து வெற்று டம்ளரை கைகளில் ஏந்தியவாறு சமையலரை நுளைந்தார்...
டம்ளரை வாங்கிக்கொண்ட கொடி,
இருங்க சுடு தண்ணீர் வெச்சு தரேன் பனி அதிகமா இருக்கு என பாசமுடன் கேட்க நான் எப்படீ சுடு தண்ணீல குளிச்சிருக்கேன் முளங்கால் செத்தவனும் சீக்கு வந்தவனும் தான் குளிப்பானுக...
சுடுதண்ணில குளிச்சா சோம்பேரித்தனம் தான் வருமென கடுகடுத்தார் சேகர்...
சரி என்னமோ பண்ணுங்க எனக்கும் வேலை மிச்சம் என பதிலுரைத்து இரவு உணவு தயார்செய்ய ஆயத்தமானாள் கொடி...
குளித்து நெற்றியில் பட்டையோடு வந்து அமர்ந்தார் சேகர்...கடவுள் நம்பிக்கை மிக்கவர்...திருமணம் ஆகி பலவருடம் கோவில் கோவிலாக ஏறி இறங்கி பிறகு உண்டான குழந்தை என்பதால் இன்னும் கடவுள் பக்தி இருமடங்கு அதிகரித்தது எனலாம்...
அதிலிருந்து தவறாமல் வெள்ளி கிழமை அம்மாவாசை என விசேச தினங்களில்
நாமக்கல்லில் இருந்து மோகனூர் செல்லும் சாலையில் சித்தர் மலைக்கு தவறாது சென்று சிவ வழிபாட்டில் தனை மறந்து கலந்து கொள்வார்...
ஆன்மீகத்தில்
தனது மனைவியே தன்னை பார்த்து கிண்டல் அடித்தாலும் மனம் தளறாதவர்...
சமையல் பணிகளை முடித்து
சாப்பிட அழைத்தாள் கொடி...
ஆனந்தும் வந்தமர்ந்தான்...
மதியம் உண்ட உணவோ
உண்ட விதமோ
அவளின் நியபகமோ
எது என்றே உணர முடியாத படி
சாப்பாட்டு பருக்கையில் கைவைத்து தேடிக்கொண்டிருக்க...
ஏன்னடா சோற்றை போட்டு வச்சதுல இருந்த தட்டுல எதையோ தொலவிகிட்டு இருக்க என சேகர் கேள்வி எழுப்பளானார்...
இல்லப்பா,இன்னைக்கு வீட்ல சாப்டறேன் நாளைக்கு ஹாஸ்ட்டல் சாப்பாடு சாப்டணும் இட்லி சட்டியில மாவோடு எலிய போட்டு வேவிக்றானுகளோ இல்ல பல்லிய போட்டு வேவிக்றானுகளோ கஷ்டம இருக்கு என வருத்தத்தோடு பதிலுரைத்தான்...
என்னடா இது இதுக்குதான் வருடம் அறுபது எழுபதாயிரம் செலவு பண்ணுறமா??
கேட்க வேண்டியதுதான?கல்லூரி முதல்வர்கிட்ட நான் நாளைக்கு வரேன் வந்து பேசறேன் என கோபமூண்டார் சேகர்...
இல்லப்பா ஒரு சில நாள் இந்த மாதிரி ஆகும் அது சமயலாலுங்க பண்ற தப்புனு சொல்லி மண்ணிப்பு கேக்குறாங்க என்ன பண்றது...அட்ஜஷ் பண்ணிதான் போகனும் என ஆறுதல் படுத்த கோபம் சற்றே தணிந்தவாறு உணவு உண்ணத் துவங்கினர்...
-காவியமாவாள்

எழுதியவர் : கிருபானந்.கு (7-Jul-15, 8:55 am)
பார்வை : 216

மேலே