காவியமானவள்-08

கனிகளிலே கிளி கொத்துய கனிகளுக்கே தனி ருசி என்பார்கள்...
அப்படியிருக்க மங்கையவள் கைவிரல் பதிந்த சோற்றுப்பருக்கைக்கும்
தனி ருசி இருந்திருக்குமோ??
இல்லையென்றால் காதலர்கள் தான் பருகிய குளிர்பானத்தை தன் துணையுடன் பரிமாறிக்கொள்வதேன்...
அனுபவத்தில் அறிந்தான் ஆனந்த்...
தமிழினி உண்டுகொண்டிருந்த உணவுத்தட்டை தன் அன்னை
திரும்பும் வேளையில் படாரென தன் பக்கம் இழுத்துக்கொண்டு தான்
புசித்த உணவை அவளுக்கு தள்ளினான்...
திறு திறு முளியுடன் வாங்கிக்கொண்டாள் தமிழினி...
யாருடைய கெட்ட நேரமோ தெரியவில்லை, ஆனந்த் அம்மா கனக்கச்சிதமாக தமிழினியின் பக்கம் உணவை தள்ளும் போது கண்டுவிட்டாள்...
இதை சிறிதும் எதிர்பாராத ஆனந்த் பயத்தில் உறைந்தான் இதயத்துடிப்பு எகிறியது...
தமிழ் செய்வதறியாது திகைத்து நின்றாள்...
ஆனால் ஆனந்தின் அன்னை கொடிமலரோ கண்டும் காணாமல் திரும்பிக்கொண்டாள்
இதுகுறித்து ஒன்றும் கேட்கவும் இல்லை...
இதயத்துடிப்பு இதமானது ஆனந்திற்க்கு,தமிழினியும் ஒன்றும் நடந்தேரியவாறு காட்டிக்கொள்ளவில்லை...
ரசித்து ருசித்து உண்டனர் இருவரும்...
யாருக்கு கிடைக்கும் மனைவியாகும் முன்னே மனம் விரும்பும்
மங்கையவள் கைப்பட்ட உணவை உண்ண...
கை கழுவ இருவரும் எழ ஆனந்தின் அன்னை கொடிமலர்
சமையலரையில் மராமத்துப் பணிகளை செய்து கொண்டிருந்தாள்,
கொடு ஆனந்த் என ஆனந்த் தமிழினிடம் பறித்த உணவு தட்டை பெற்றுக்கொண்டு
கழுவுவதற்க்கு சமயலரை முற்ப்பட்டாள்...
மருமகளே தட்டை அப்படியே வச்சுட்டு கை மட்டும் கழுவுக்கமா என கூற மகிழ்ச்சியில் முகம் மலர்ந்தாள் தமிழ் இல்ல ஆண்டி பரவால நானே கழுவி வைக்றேன் என பதிலுறைத்து என்ன ஆண்டி திடீருனு மருமகளேனு கூப்டறிங்க என கேள்வியையும் எழுப்பினாள் தமிழ்...
உண்மை தான தமிழ் எனக்கும் தெரியும் என் மகனுக்கு உன்ன ரொம்ப பிடிக்கும்னு உனக்கும் அவன பிடிக்கும்னு நினைக்றேன் இல்லனா அவன் சாப்பாட்ட மாத்தி சாப்டும் போதே தெரியுது...
ஆண்டி,நீங்க பாத்திங்களா சாரி ஆண்டி அப்டி நடந்திருக்க கூடாது ஆனா ஆனந்த் படாறுனு தட்ட தன் பக்கம் தள்ளும் போது என்ன பண்றதுனு தெரியல பதட்டத்துல நானும் எடுத்துகிட்டேன்,நீங்க அப்பயே கேட்பிங்கனு பயந்துட்டோம்...
எனக்கும் உன்ன ரொம்ப பிடிக்குமா உன்ன போல மருமகளதான் கொண்டுவரனும்னு மனசுல நினச்சிருந்தேன் நீயே வருவனா ரொம்ப சந்தோசம்,
ஆனா இப்பதான் நீ பண்ணிரண்டாவது முடிச்சிருக்க இளங்கலை படிப்பு நல்லபடியா முடி...அவனும் இன்னும் ஒரு வருசத்துல படிப்பு முடிச்சு நல்ல வேளைல சேர்ந்துருவான் வாழ்க்கைலயும் செட்டில் ஆகுற நிலைக்கு வந்துடுவான் அப்றம் உன் அம்மா கிட்ட நானே பேசுரேன் ஆனா இந்த விசயம் எனக்கு தெரிஞ்சு நான் உன் கிட்ட பேசுனதா எதயும் அவன் கிட்ட காட்டிக்காத
அப்றம் ரொம்ப அட்வான்டேஜ் எடுத்துக்வான் என சொல்ல...
தமிழினியின் மகிழ்ச்சிக்கு அளவே இல்லை...
இல்ல ஆண்டி நான் எதயும் சொல்லல...
ரொம்ப சந்தோசமா இருக்கு என மகிழ்ச்சியை வெளிப்படுத்தினாள் தமிழினி...
சரி ஆண்டி நான் கிளம்பறேன் என சொல்லி விடைபெற்று முற்ப்பட்டாள்
சரி,ஆனந்த் நான் கிளம்பரேன் போய் தூங்கனும் என
கண்களை துடைத்தபடி நின்றாள்,என்ன தமிழ் இந்த நேரத்துல தூங்கறயா??
ஆமடா வீட்டுல இருக்கும் போது தூங்கி பழக்கமாகிடிச்சு இந்த நேரமானா தூக்கம் வந்துரும் என்றவாறு நகர்ந்தாள்...
சரி தமிழ் போய் தூங்கு,காலைல காலேஜ்க்கு
நேரமா கிளம்பிடுவேன் என மீண்டும் நினைவுபடுத்தினான் ஆனந்த்
சரிடா நல்லபடியா பரிட்சை எழுதிட்டு வா...என சொல்ல
என்ன தமிழ் அவ்ளோதானா என்றவாறு பம்பானான் ஆனந்த்
வேற என்னடா எதிர்பாக்ற பேனா எதாச்சும் வேனுமா எழுத...
என கிண்டலாக சிரித்தவாறே கேட்க
கொண்றுவேன்டி என நான் என்னோ எதிர்பார்த்தேன் கிடைக்காது போல என வெகுண்ட ஆனந்தை புருவத்தை உயர்த்தி அதுலாம் ஒன்னும் நடக்காது ஒழுங்கா பரிட்சைய முடிச்சுட்டுவா என சொல்லி வாசற்படியை கடந்து எட்டி வைத்தாள்...
சரிடீ போய் தூங்கு உனக்கு தூக்கம்தான முக்கியம் என வருத்தம் தோய்ந்த குரலில் முகம் வாடி சொல்ல கோவிச்சுக்காதடா எல்லாம் நம்ப நல்லதுக்குதான் பொருத்திரு...
என வயது மிதிர்ந்தவள் போல் எடுத்துரைத்தாள் தமிழ்...
சரிடி பாய் என கையசைத்து அனுப்பிவைத்து தன் அரையில் நுழைந்து தாளிட்டுக் கொண்டான்...
தன் பனிகளை முடித்து கொடிமலரும் டீவியில் மூழ்கலானாள்...
எப்போதும் படிக்கும் போது எந்த இடையூறும் இன்றி தன் அறையில் தாழிட்டுக் கொண்டு படிப்பதை வழக்கமாக கொண்டவன் ஆனந்த்...
படித்துக்கொண்டிருக்க நேரம் கடந்தது...மாலை சூரியன் மறைந்தது...
அலுவலகத்தில் இருந்து சேகர் வீடு திரும்பினார்...
டீவியில் கண்பதித்திருந்த கொடி பார்வை சேகரை நோக்கியது வாங்க எப்பவும் போல டயர்டா வருவிங்க போல என கேட்க ஆமடி அவன் இப்டி இவன் இப்டி எல்லா வேளையும் நாம்பளே பார்க்க வேண்டி இருக்கு என புராணத்தை அவிழ்த்துவிட ஏண்டா கேட்டோமென எப்டி தப்பிப்பதென யோசித்து இருங்க டீ கொண்டு வரேனு சமையலரை நுளைந்தாள் கொடிமலர்...
எங்கடி போய்ட்டான் நாளைக்கு காலேஜ்அ வெச்சுக்கிட்டு சுத்த போய்ட்டான என கடிந்தார் கோபமுடன்,இல்லிங்க ரூம்ப்ல படிக்கறான் என அங்கிருந்தே குரல் கொடுத்தாள் கொடிமலர்...அப்பா தன்னை கேட்பதை அறிந்து வெளியேறினான் ஆனந்ந் வாங்க அப்பா இப்பதான் வந்திங்களா?
என விசாரிக்க
நான் வந்து காழ் மணிநேரம் ஆகுதுடா நான் வந்ததுகூட தெரியாம படிக்றயா?அதிசயமா இருக்கு என கோபம் தனிந்து கேட்டார் சேகர்...
ஆமா அப்பா பரிட்சை நெருங்குதே அதான் என்று பேசிக்கொண்டிருக்க டீ வந்தது
இந்தாங்க எடுத்துக்குங்க என்று
நீட்டினாள் கொடி
பிறகு மெல்ல ஆனந்த்
பக்கம் திரும்பியது டீ கொணர்ந்த தட்டு...
ஆனந்த் டம்ளரை பற்றி பருகளானான்...
சேகர் டீ பருகியவாறே பேச்சை தொடர்ந்தார் ...
உரையாடல் நீண்டது...
காவியமாவாள்..

எழுதியவர் : கிருபானந்.கு (7-Jul-15, 8:10 am)
பார்வை : 239

மேலே