கிரேக்க பொருளாதார வீழ்ச்சி

பழம்பெரும் நாகரீகம் கொண்டதும், சாக்ரடீஸ், அரிஸ்டாட்டில், பிளாட்டோ போன்ற தத்துவ ஞானிகளை உலகுக்கு அளித்ததும், அலெக்சாண்டர் போன்ற மாவீரர்களை உலகுக்கு அளித்த நாடான கிரேக்கம் (கிரீஸ்) இன்று கடுமையான பொருளாதார சிக்கலில் சிக்கி தவித்துக்கொண்டிருக்கிறது. காரணம், பொறுப்பற்ற ஆட்சியாளர்கள் மற்றும் ஆடம்பர மோகம் கொண்ட மக்களே என்று அறிக்கைகள் கூறுகின்றன. பன்னாட்டு நிதியத்திடம் பெற்ற கடன்களை உரிய தவணைக்குள் செலுத்தாத காரணத்தால் அந்நாடு இன்று இந்த நிலைமைக்கு வந்துள்ளது. ஐரோப்பிய யூனியனில் அங்கம் வகித்த போதும் எந்த நாடும் ஆதரிக்காத நிலையில் இன்று உலக நாடுகளிடம் கையேந்தி நிற்கும் அவல நிலையில் அந்நாடு உள்ளது.

இதே நிலை நம்முடைய இந்திய துணைக்கண்டத்திற்கு வராது. எனினும் நாமும் எச்சரிக்கை உணர்வுடனும் ஆடம்பர மோகம் தவிர்த்தும், இந்திய பொருள்களையே வாங்குவது என்று முடிவெடுக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம்.

எழுதியவர் : ரேணுசேகர் (9-Jul-15, 12:14 pm)
பார்வை : 122

மேலே