என் உயிர் தோழன்
தோழனே வா தொன்றி கிடக்கும்
நம் தோழனை உயற்றிட
தோல் கருகி கூனி குருகி நிற்க்கும்
நாங்கள் உம் தோழன் அல்லவா?
என்ன பாவம் செய்தோம்!
நீங்கள் என்ன தவம் செய்தீர்கள் !
தொழிலாளியாய் நாங்கள் பிறக்கவும்
முதலாளியாய்நீங்கள் பிறக்கவும்........
கை நீட்டி காசு வாங்குவதால்-நாங்கள் தொழிலாளி!
கை நீட்டி காசு கொடுப்பதால்-நீங்கள் முதலாளி!
என்ற வேற்றுமை மற்றும் ஒற்றுமையானால்
சமத்துவம் மற்றுமே நம் கூட்டாளி தோழா!
வணக்கம்
என்று சொல்லி வந்தவரை வாழ்த்தி
நான்கு சக்கர நாற்காலியில் நாழிகை கழிக்கும்
நகர புற மாந்தர்களே.......,
உங்களை தொழிலாளி என்று சொன்னால்...!
காலையில்
கதிரவனுக்கு வணக்கம் சொல்லி
பூமிதாயிக்கு பூ பாதமிட்டு
மண்ணை பதம் பார்த்து
பயித்துக்கு நீர் தெளித்து
களைப்பு தெறியாம கானாபாட்டு பாடிகிட்டு
வயக்காட்டு புழுதிக்குள்ள
வயசு தெரியாம தோல்கலப்ப தூக்கிகிட்டு
சேத்துல கால் நா பதிச்சா …,,
வணக்கம் சொன்ன கதிரவன் தோல் உரிக்கும்!
பாதம் மிட்ட பூமி தாய் பாதம் உரிக்கும்!
பள்ளாங்க்குழி விளையாடிய குழந்தை
பாத்திக்கு கஞ்சி கொண்டு வரும்!
மாலையில வேல முடிஞ்சி
வீட்டுக்கு நாங்கள் போனா
மல்லாக்க படுத்துகொண்டு என் தகப்பன் சொல்கிறார்
நாளை ஏன் விடிகிறது என்று ..............................................

