ஆரஞ்சு மிட்டாய்

கருப்பசாமி தாத்தா
பெட்டிக்கடையில்
அப்பா கைநிறைய
வாங்கித்தந்து
இரண்டை
கடவாயோரத்திலும்

தங்கைக்குமெனவும்
அப்புறமாய் சாப்பிடவும்
மிச்சத்தை பாக்கெட்டிலும்
பதுக்கி

கொஞ்சம் இனிப்புமாய்
அதிகம் புளிப்புமாய்
இருக்கும் அந்த
ஆரஞ்சு மிட்டாயின்
சுவையைப் போல்...............................................

நான்கு நாட்களாய்
உடம்புக்குக் கொஞ்சம்
சரியில்லையென்று
வாய்க்குக் கொஞ்சம்
கசக்குதென்று
நியூ பார்மசியில்
வாங்கிச் சுவைத்த
ஸ்ட்ரெப்சில்ஸின்
சுவை...............................

சத்தியமாய் இல்லை........!!!

எழுதியவர் : தர்மராஜ் (10-Jul-15, 3:02 pm)
Tanglish : aaranchu mittaai
பார்வை : 431

மேலே